தனியுரிமைக் கொள்கைPrivacy policy
கடைசியாகப் புதுப்பித்தது: 21 அக்டோபர் 2026Last updated: 21 October 2026
Yalix Horoscope (horoscope.yalixlabs.com, கைபேசி செயலி, Yalix Pro) என்பது தமிழ்நாட்டில் உள்ள Pattiamma Groups நிறுவனத்தின் Yalix Labs பிரிவின் தயாரிப்பு. இந்தப் பக்கம் நாங்கள் எந்தத் தகவல்களைப் பெறுகிறோம், ஏன், எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம் என்பதைச் சொல்கிறது. டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2023-ன்படி நடக்கிறோம்.
நாங்கள் பெறுவது
- பிறப்பு விவரம் - பெயர், பிறந்த தேதி, நேரம், ஊர். ஜாதகம், பொருத்தம், பலன் கணிக்க மட்டுமே பயன்படுத்துகிறோம்.
- கணக்கு விவரம் - நீங்கள் உள்நுழைந்தால்: Google கணக்கின் அடையாள எண், பெயர், மின்னஞ்சல்; அல்லது Truecaller சரிபார்த்த கைபேசி எண்ணும் பெயரும்; அல்லது உங்கள் மின்னஞ்சலும் கடவுச்சொல்லும் (கடவுச்சொல்லை நேரடியாக வைப்பதில்லை - மீட்க முடியாத உப்பிட்ட மறையாக்கம் (salted hash) மட்டுமே).
- கட்டண விவரம் - Razorpay தரும் கட்டண எண்கள் மட்டும். உங்கள் கார்டு, UPI, வங்கி விவரங்கள் எங்களிடம் வருவதில்லை.
- தொழில்நுட்ப விவரம் - தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் IP முகவரி. எங்கள் வலைச் சர்வரின் பதிவில் IP முகவரியும் கேட்ட பக்கமும் மட்டும் இருக்கும் - பிறப்பு விவரம் ஒருபோதும் இல்லை. பாதுகாப்புக்காக இந்தப் பதிவுகள் ஓராண்டு வைக்கப்பட்டு, பின் தானாக நீக்கப்படும்.
நாங்கள் செய்யாதது
- உங்கள் தகவலை யாருக்கும் விற்பதில்லை, விளம்பரத்துக்குப் பயன்படுத்துவதில்லை.
- இந்தத் தளத்தில் விளம்பரக் கண்காணிப்புக் கருவிகள் இல்லை.
- எங்கள் பதிவுகளில் (logs) பிறப்பு விவரத்துக்குப் பதில் அடையாளக் குறியீடு மட்டுமே எழுதப்படும்.
பாதுகாப்பும் சேமிப்பும்
- சேமிக்கும் பிறப்பு விவரங்கள் மறையாக்கம் (encryption) செய்யப்படுகின்றன. எல்லாத் தொடர்பும் HTTPS வழியாகவே நடக்கும்.
- கணித்த ஜாதகம் வேகத்துக்காக இரண்டு நாள் வரை, மறையாக்கத்துடன், தற்காலிகமாக வைக்கப்படும்.
- வாங்கிய அறிக்கை உங்கள் கணக்கில் ஓராண்டு இருக்கும்.
- எங்கள் சர்வர்கள் OVHcloud நிறுவனத்தின் சிங்கப்பூர் தரவு மையத்தில் இயங்குகின்றன; உங்கள் தகவல் அங்கே மறையாக்கத்துடன் சேமிக்கப்படுகிறது.
உங்கள் உலாவியில்
மொழி, ஊர், உள்நுழைவுக் குறியீடு உங்கள் உலாவியில் (localStorage) இருக்கும். நீங்கள் கொடுக்கும் பிறப்பு விவரம் இந்தத் தாவலில் (sessionStorage) மட்டுமே இருக்கும்; தாவலை மூடினால் மறையும். நீங்கள் "சேமி" அழுத்தினால் மட்டுமே அந்த ஜாதகம் இந்தக் கணினியின் உலாவியில் (localStorage) வைக்கப்படும்; "குடும்ப ஜாதகம்" பக்கத்தில் எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். உள்நுழைந்திருந்தால் அது உங்கள் கணக்கிலும், மறையாக்கத்துடன், சேமிக்கப்படும்.
மற்ற சேவைகள்
Google (உள்நுழைவு, எழுத்துருக்கள்), Truecaller (உள்நுழைவு - சரிபார்த்த கைபேசி எண்ணும் பெயரும் மட்டும்), Razorpay (கட்டணம்), மின்னஞ்சல் சேவை (கடவுச்சொல் மாற்றும் இணைப்பை அனுப்ப). ஒவ்வொன்றுக்கும் அதன் சொந்தக் கொள்கை உண்டு.
உங்கள் உரிமைகள்
உங்கள் தகவலைப் பார்க்க, திருத்த, அழிக்க உரிமை உண்டு. இணையதளம் அல்லது செயலியின் "என் கணக்கு" பக்கத்தில் "என் தரவை அழிக்க" அழுத்தினால் உங்கள் கணக்கு, ஜாதகங்கள், அறிக்கைகள் உடனே மறையும். 30 நாட்களுக்குள் மீண்டும் உள்நுழைந்தால் அவை திரும்பக் கிடைக்கும்; இல்லையெனில் 30 நாளுக்குப் பின் தானாக நிரந்தரமாக அழிக்கப்படும் - அறிக்கைக் கோப்புகளும் சேர்த்து. கட்டணப் பதிவுகள் மட்டும், தனிநபர் விவரம் இல்லாமல், கணக்கு ஒப்பீட்டுக்காக இருக்கும். முழு விவரம்: கணக்கை அழிப்பது எப்படி.
மற்றவர்களின் விவரங்கள்
குடும்பத்தினர் அல்லது திருமண வரன் போன்ற மற்றவர்களின் பிறப்பு விவரத்தைக் கொடுக்கும்போது, அவர்களின் அனுமதி உங்களிடம் உண்டு என்று உறுதி செய்கிறீர்கள். அவர்கள் எங்களுக்கு எழுதி அந்த விவரத்தை அழிக்கச் சொல்லலாம்.
வயதும் குழந்தைகளும்
கணக்குத் தொடங்க 18 வயது நிறைந்திருக்க வேண்டும்; அல்லது பெற்றோர் / பாதுகாவலர் அனுமதியுடன் பயன்படுத்த வேண்டும். ஒரு குழந்தையின் பிறப்பு விவரத்தைக் கொடுத்தால், நீங்கள் அதன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் என்று உறுதி செய்கிறீர்கள். குழந்தைகளைக் குறிவைத்த விளம்பரமோ கண்காணிப்போ இல்லை.
குறைதீர்ப்பு அலுவலரும் புகார்களும்
குறைதீர்ப்பு அலுவலர்: Boopathy K R, உரிமையாளர், Pattiamma Groups. மின்னஞ்சல் enquiry@yalixlabs.com, தொலைபேசி +91 89396 66998. முகவரி: Pattiamma Groups (உரிமையாளர்: Boopathy K R), கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு 638453.
ஒவ்வொரு புகாருக்கும் 48 மணி நேரத்துக்குள் பெற்றுக்கொண்டதாகப் பதில் தருகிறோம்; 30 நாட்களுக்குள் தீர்வு தருகிறோம். எங்கள் தீர்வில் திருப்தி இல்லையெனில், இந்திய தரவுப் பாதுகாப்பு வாரியத்திடம் (Data Protection Board of India) புகார் செய்யலாம்.
Yalix Horoscope (horoscope.yalixlabs.com, the phone app and Yalix Pro) is a product of Yalix Labs, a unit of Pattiamma Groups, Tamil Nadu. This page says what information we receive, why, and how long we keep it. We follow India's Digital Personal Data Protection Act, 2023.
What we receive
- Birth details - name, date, time and place of birth. Used only to compute charts, matches and palan.
- Account details - if you sign in: your Google account identifier, name and email; or the mobile number and name Truecaller verified; or your email and a password (never the password itself - only a salted hash that cannot be turned back).
- Payment details - only the payment references Razorpay gives us. Your card, UPI or bank details never reach us.
- Technical details - your IP address, to stop abuse. Our web server's log records the IP address and the page asked for - never a birth. These logs are kept for one year for security, then removed automatically.
What we do not do
- We never sell your information or use it for advertising.
- This site carries no advertising trackers.
- Our logs carry a one-way chart identifier instead of birth details.
Security and storage
- Saved birth details are encrypted at rest. Everything travels over HTTPS.
- A computed chart is kept, encrypted, for up to two days so that it opens quickly again.
- A report you buy stays in your account for one year.
- Our servers are run by OVHcloud in its Singapore data centre; your information is stored there, encrypted.
In your browser
Your language, town and sign-in token are kept in your browser (localStorage). Birth details you enter are kept in this tab only (sessionStorage) and are gone when you close it. Only when you press "Save" is that chart kept in this computer's browser (localStorage); you can remove it any time on the "Family charts" page. When you are signed in it is also saved in your account, encrypted.
Other services
Google (sign-in, fonts), Truecaller (sign-in - only the verified mobile number and name), Razorpay (payments) and a mail service (to send the link that resets a password). Each has its own policy.
Your rights
You may see, correct and delete your information. "Delete my data" on the My account page of the website or the app hides your account, charts and reports at once. Sign in again within 30 days and they come back; otherwise they are erased for good, automatically, after 30 days - the report files included. Only payment records remain, with no personal details, so they can be matched to bank statements. Full details: how to delete your account.
Other people's details
When you enter someone else's birth details - a family member's, or a marriage prospect's - you confirm that you have their permission. They may write to us and ask for those details to be deleted.
Age and children
To create an account you must be 18 or older, or use it with the consent of a parent or guardian. If you enter a child's birth details, you confirm that you are the child's parent or guardian. There is no advertising or tracking aimed at children.
Grievance Officer and complaints
Grievance Officer: Boopathy K R, Proprietor, Pattiamma Groups. Email enquiry@yalixlabs.com, phone +91 89396 66998. Address: Pattiamma Groups (proprietor: Boopathy K R), Gobichettipalayam, Erode district, Tamil Nadu 638453.
We acknowledge every complaint within 48 hours and resolve it within 30 days. If you are not satisfied with our answer, you may complain to the Data Protection Board of India.