கணக்கையும் தரவையும் அழிக்கDelete your account and data
Yalix Horoscope - Yalix Labs (Pattiamma Groups). இணையதளம், கைபேசி செயலி இரண்டுக்கும் ஒரே கணக்கு. கடைசியாகப் புதுப்பித்தது: 21 அக்டோபர் 2026Yalix Horoscope - Yalix Labs (Pattiamma Groups). One account for the website and the phone app. Last updated: 21 October 2026
செயலியில் அழிக்க
- Yalix Horoscope செயலியைத் திறந்து உள்நுழையுங்கள்.
- "என் கணக்கு" பக்கத்தைத் திறங்கள்.
- "என் தரவை நீக்கு" அழுத்தி, "நிச்சயமாக நீக்கவா?" என்பதை உறுதி செய்யுங்கள்.
இணையதளத்தில் அழிக்க
- horoscope.yalixlabs.com/account திறந்து உள்நுழையுங்கள்.
- "என் தரவை அழிக்க" அழுத்தி, "ஆம், அழிக்கலாம்" என்பதை உறுதி செய்யுங்கள்.
செயலி இல்லாமல், மின்னஞ்சல் மூலம்
உங்கள் கணக்கின் மின்னஞ்சல் அல்லது கைபேசி எண்ணைக் குறிப்பிட்டு enquiry@yalixlabs.com முகவரிக்கு "என் கணக்கை அழிக்கவும்" என்று எழுதுங்கள். கணக்கு உங்களுடையதுதான் என்று உறுதி செய்த பின் 7 நாட்களுக்குள் அழிப்போம்.
அழிக்கப்படுவது
- உங்கள் கணக்கு - பெயர், மின்னஞ்சல், கைபேசி எண், Google / Truecaller அடையாளம்.
- சேமித்த எல்லா ஜாதகங்களும் பிறப்பு விவரங்களும் (குடும்பத்தினர் உட்பட), குறிப்புகள்.
- வாங்கிய அறிக்கைகளும் அவற்றின் PDF கோப்புகளும்.
- அழித்த சாதனத்தில் வைத்திருந்த உள்நுழைவும் சேமித்த ஜாதகங்களும்.
எப்போது
- உடனே: எல்லாச் சாதனங்களிலும் கணக்கிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்; ஜாதகங்களும் அறிக்கைகளும் மறையும்.
- 30 நாட்களுக்குள் மீண்டும் உள்நுழைந்தால் கணக்கில் இருந்தவை திரும்பக் கிடைக்கும் (தவறுதலாக அழித்திருந்தால்).
- 30 நாளுக்குப் பின்: தானாக, நிரந்தரமாக அழிக்கப்படும். அதன் பின் திரும்பப் பெற முடியாது.
- வேகத்துக்காக மறையாக்கத்துடன் தற்காலிகமாக வைக்கப்படும் கணித்த ஜாதகம் இரண்டு நாளில் தானாக நீங்கும்.
வைக்கப்படுவது
- கட்டணப் பதிவுகள் மட்டும் (தொகை, தேதி, Razorpay எண்) - உங்கள் பெயர், எண், பிறப்பு விவரம் எதுவும் இல்லாமல் - வங்கிக் கணக்குடனும் வரிக் கணக்குடனும் ஒப்பிடுவதற்காக, சட்டம் கேட்கும் காலம் வரை.
மேலும்: தனியுரிமைக் கொள்கை. கேள்விகளுக்கு: enquiry@yalixlabs.com, +91 89396 66998.
Delete in the app
- Open the Yalix Horoscope app and sign in.
- Open "My account".
- Tap "Delete my data" and confirm "Really delete?".
Delete on the website
- Open horoscope.yalixlabs.com/account and sign in.
- Press "Delete my data" and confirm "Yes, delete".
Without the app, by email
Write "Please delete my account" to enquiry@yalixlabs.com, giving the email or mobile number of your account. Once we have confirmed the account is yours, we delete it within 7 days.
What is deleted
- Your account - name, email, mobile number, Google / Truecaller identity.
- Every saved chart and birth detail (your family's included), and notes.
- Reports you bought - the PDF files included.
- The sign-in and the charts saved on the device you deleted from.
When
- At once: you are signed out on every device; charts and reports disappear.
- Sign in again within 30 days and what was in your account comes back (in case you deleted by mistake).
- After 30 days: erased for good, automatically. It cannot be brought back after that.
- A computed chart kept encrypted for a short while, for speed, is removed by itself within two days.
What is kept
- Payment records only (amount, date, Razorpay reference) - with no name, number or birth detail - so they can be matched to bank statements and tax returns, for as long as the law requires.
See also: Privacy policy. Questions: enquiry@yalixlabs.com, +91 89396 66998.