விதிமுறைகள்Policies

பயன்பாட்டு விதிமுறைகள்Terms of use

கடைசியாகப் புதுப்பித்தது: 17 அக்டோபர் 2026Last updated: 17 October 2026

இந்தத் தளம், கைபேசி செயலி, Yalix Pro ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்கண்ட விதிமுறைகளை ஏற்கிறீர்கள். சேவையை வழங்குவது: Yalix Labs, Pattiamma Groups, தமிழ்நாடு.

சேவை

ஜாதகம், திருமணப் பொருத்தம், பஞ்சாங்கம், ராசி பலன், அச்சிடத் தயாரான அறிக்கைகள், ஜோதிடர்களுக்கான Yalix Pro மென்பொருள் ஆகியவற்றை வழங்குகிறோம். கணிதம் வானியல் தரவு மற்றும் பாரம்பரிய நூல்களின் விதிகளின்படி செய்யப்படுகிறது. பலன்கள் பாரம்பரிய ஜோதிட அறிவின் அடிப்படையிலானவை; எதிர்கால நிகழ்வுகளுக்கு உத்தரவாதம் அல்ல.

நீங்கள் தரும் விவரம்

ஜாதகம் நீங்கள் கொடுக்கும் பிறந்த தேதி, நேரம், ஊரைப் பொறுத்தது. அவை சரியா என்று பார்ப்பது உங்கள் பொறுப்பு. மற்றவரின் விவரத்தை அவரின் சம்மதத்துடன் மட்டுமே கொடுங்கள்.

கணக்கு

Google, Truecaller, அல்லது மின்னஞ்சலும் கடவுச்சொல்லும் கொண்டு உள்நுழையலாம். கணக்குத் தொடங்க 18 வயது நிறைந்திருக்க வேண்டும், அல்லது பெற்றோர் / பாதுகாவலர் அனுமதியுடன் பயன்படுத்த வேண்டும். உங்கள் கணக்கில் நடக்கும் செயல்களுக்கு நீங்களே பொறுப்பு. தவறான பயன்பாடு இருந்தால் கணக்கை நிறுத்தலாம்.

கட்டணம்

விலைகள் இந்திய ரூபாயில், வாங்கும் முன் திரையில் காட்டப்படும். கட்டணம் Razorpay மூலம் பெறப்படும். ரத்தும் பணம் திருப்புதலும் எங்கள் ரத்து மற்றும் பணம் திருப்புதல் கொள்கைப்படி நடக்கும்.

Yalix Pro உரிமம்

ஒரு உரிமம் ஒருவருக்கு, ஓராண்டுக்கு, இரண்டு கணினிகள் வரை. பிறருக்கு மாற்றவோ விற்கவோ கூடாது. உங்கள் லெட்டர்ஹெட்டுடன் அச்சிடும் ஜாதகங்களை உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கலாம்.

அறிவுசார் சொத்து

மென்பொருள், கணித முறை, பலன் வரிகள், வடிவமைப்பு, Yali சின்னம் Yalix Labs-க்குச் சொந்தமானவை. வாங்கிய அறிக்கையை உங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கும் குடும்பத்துடன் பகிரவும் பயன்படுத்தலாம். தானியங்கி முறையில் பெருமளவில் தரவு எடுப்பது (scraping) அனுமதியில்லை.

பொறுப்பு வரம்பு

சேவை உள்ளபடியே வழங்கப்படுகிறது. ஜோதிடப் பலனின் அடிப்படையில் எடுக்கும் முடிவுகள் உங்களுடையவை. எந்த நிலையிலும் எங்கள் பொறுப்பு, அந்தச் சேவைக்கு நீங்கள் செலுத்திய தொகைக்கு மேல் இல்லை.

சட்டம்

இந்த விதிமுறைகள் இந்தியச் சட்டத்துக்கு உட்பட்டவை. தகராறுகள் தமிழ்நாட்டு நீதிமன்றங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவை.

தொடர்பு

enquiry@yalixlabs.com · +91 89396 66998

By using this website, the phone app or Yalix Pro you accept these terms. The service is provided by Yalix Labs, Pattiamma Groups, Tamil Nadu.

The service

Horoscopes, marriage matching, panchangam, rasi palan, print-ready reports and the Yalix Pro software for astrologers. The calculations follow astronomical data and the rules of the traditional texts. Readings are based on traditional astrological knowledge and are not a guarantee of future events.

The details you give

A chart depends on the date, time and place of birth you enter; checking them is your responsibility. Enter another person's details only with their consent.

Your account

You may sign in with Google, Truecaller, or an email and a password. To create an account you must be 18 or older, or use it with the consent of a parent or guardian. You are responsible for what is done in your account. We may suspend an account that is misused.

Payments

Prices are in Indian rupees and shown on screen before you buy. Payments are processed by Razorpay. Cancellations and refunds follow our cancellation and refund policy.

The Yalix Pro licence

One licence is for one person, for one year, on up to two computers. It may not be transferred or resold. Jathagams you print under your own letterhead are yours to hand to your clients.

Intellectual property

The software, its method of calculation, the reading texts, the design and the Yali emblem belong to Yalix Labs. A report you buy is for your own use and to share with your family. Automated bulk collection (scraping) is not permitted.

Limitation of liability

The service is provided as it is. Decisions taken on the basis of an astrological reading are your own. Our liability is in every case limited to the amount you paid for the service concerned.

Law

These terms are governed by the laws of India, and disputes are subject to the courts of Tamil Nadu.

Contact

enquiry@yalixlabs.com · +91 89396 66998